கோவை 17.06.23:

தமிழ்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடிகையாகவும்,பாடகியாகவும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஆண்ட்ரியா கோவையில் வரும் ஜூலை 1 ஆம் தேதி லைவ் இன் கான்செர்ட் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.ரெட் நூல் யூ டியூப் சேனல் வழங்கும் இந்த லைவ் இன் கான்செர்ட் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் மாலில் நடிகை ஆன்ட்ரியா செய்தியாளர்களிடம் பேசினார்.
கோலாலம்பூரில் கடைசியாக இசைக்கச்சேரி நடத்தினோம் .  கோவையில் வரும் 1ம் தேதி   2 மணி நேரம் இசை நிகழ்ச்சயை நடத்த உள்ளோம். இளையராஜா பாடல்களும்,  நான் பாடிய பாடல்களும் இந்த கச்சேரியில் பாட  உள்ளோம். கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்த  உள்ளோம்.  கோவை ரசிகர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி மாபெரும் இன்னிசை விருந்து காத்திருப்பதாக அவர் கூறினார்.

இந்த இசைக்கச்சேரிக்கு ரூ.250, 500, 1000 மற்றும் ரூ.1500 என்று டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் புக் மை ஷோ மற்றும் பேடிஎம்-இல் கிடைக்கும் என்பது குறிப்படதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *