கோவை நவ 16:
ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனுத் தாக்கல் –

கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எக்ஸ் எம் எல் ஏ, கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா ( எ) கிருஷ்ணன் ,கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சி . ஆர். ராமச்சந்திரன் எக்ஸ்.எம் எல் ஏ , கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.சேனாதிபதி, கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் ஆகியோர் அறிவிப்பு.

அன்புடையீர் வணக்கம்,
கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோர், அதற்கான விருப்ப மனுத்தாக்கல்,இன்று, 16-11-2021 செவ்வாய்க்கிழமை, காலை 11.00 மணியளவில், சித்ரா அருகில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் மாண்புமிகு கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. அவர்களும் , மாண்புமிகு. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்களும் பெற்றுக் கொள்கிறார்கள் . இந்த விருப்ப மனுத் தாக்கல் இன்று 16.11.2021 செவ்வாய்க்கிழமை முதல் 19.11.2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை வழங்கலாம்.

இப்படிக்கு,

நா.கார்த்திக் எக்ஸ். எம் எல் ஏ.

கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்

பையா ( எ) கிருஷ்ணன்

கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்,

சி . ஆர். ராமச்சந்திரன் எக்ஸ். எம் எல் ஏ ,

கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்

எஸ்.சேனாதிபதி,

கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்

டாகடர் வரதராஜன்

கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *