டிசம்பர் 14-ந் தேதி வரை ஊட்டி மலை ரயில் ரத்து.

06.12.21:

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம்
குன்னுார் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதுடன்,பாறைகள் விழுகின்றன. இதனால், அக்டோபர் 23ல் இருந்து மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.கடந்த இரு நாட்களில் கன மழை காரணமாக, ஹில்குரோவ் – கல்லார் இடையே நேற்றும் பாறைகள் விழுந்தன.

10க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குன்னுார் – மேட்டுப்பாளையம் இடையே, டிசம்பர் 14 வரை ரயிலை ரத்து செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டி – குன்னுார் ரயில், வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *