ஓமைக்ரான் தொற்று கோவை விமான நிலையத்தில் சோதனை.
30.11.21:
தென் ஆப்பிரிக்காவில் சில நாள்களுக்கு முன் ஒமைக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்,இதன் பரவும் தன்மை வேகமாக உள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பரிசோதனையானது சளி மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படுகிறது.
கோயம்புத்தூர் விமான நிலையத்திலும் இந்தப் பரிசோதனையானது மேற்கொள்ளப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.இப்பரிசோதனை செய்யப்படும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவு வரும்வரை அவர்கள் எங்கும் செல்லக்கூடாது என்றும்,அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.