குழந்தைகள் தின விழாவை ஆஷ்ரயா தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுடன் கொண்டாடிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஹாசினி, பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.திருமால், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கௌசல்யா, வடவள்ளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.சதீஷ் குமார் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் ஆஷ்ரயா தொண்டு நிறுவனத்தில் இருந்த 90 குழந்தைகளுடன் இன்று(14.11.2021)குழந்தைகள் தின விழாவை கொண்டாடினார்கள். இவ்விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளிடம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது, 1)குழந்தைகளே படித்து வாழ்வில் உயர்ந்து தனக்கென உரிய இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்null 2)குழந்தைகளே அச்சம் கொள்ள வேண்டாம் உங்களிடம் யாரேனும் தவறாக நடந்துகொண்டால் உடனடியாக Don’t Touch எனக்கூறி அவ்விடத்தை விட்டுச் சென்று உங்களின் நம்பிக்கையானவரிடம் கூறுங்கள் 3)குழந்தைகளே வாழ்வில் முன்னேற உடல் ஆரோக்கியம் முக்கியம் என்றும் அதற்கு சரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்.மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஹாசினி அவர்கள் குழந்தைகளே கவலை கொள்ள வேண்டாம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக அழைத்திடுங்கள் 24 மணி நேரமும் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை (94981-81212) மற்றும் விடியலை (0422-2300999) உங்களுக்காக உதவிட நாங்கள் இருக்கிறோம் எனக் கூறினார். இவ்விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி இவ் விழாவை சிறப்பித்தனர் கோவை மாவட்ட காவல்துறையினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *