கை கொடுக்கும் கோவை.வெள்ள நிவாரணம்.

கோவை 19.12.23:சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் மூலம்,  இரண்டு டன் அளவிற்கு பால் பிரட் சப்பாத்தி உள்ளிட்ட  நிவாரண பொருட்கள் ,தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலிருந்து தென் மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்ப கோவை மாவட்ட நிர்வாகம்  முதற்கட்டமாக ஒரு டன் அளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியது.கோவையில் இயங்கும் தன்னர்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அதற்காக சூலூரில் இயங்கிவரும் இந்திய விமானப்படை தளத்திலிருந்து, 3 விமானப்படை ஹெலிகாப்டர்கள் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்றது .
சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு நிவாரணப் பொருட்கள் மொத்தமாக கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மீண்டும் இரண்டாம் கட்டமாக இன்று காலை 7:30 மணியளவில் நிவாரணம் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் ,பால், சப்பாத்தி ,பிரட் மற்றும் பெட்ஷீட் உள்ளிட்ட பொருட்கள்  இரண்டாம் கட்டமாக 2 ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது இது மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு மதுரையிலிருந்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த தனியார் திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்களை சேகரித்து பிரிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.நேற்று இரவு முதல் கோவை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் தலைமையிலான ஊழியர்கள் பேரூராட்சி ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.