ஜல்லிக்கட்டு போட்டி மற்றொரு தேதியில் அறிவிப்பது குறித்து அரசு ஆலோசனைக்கு அனுப்பி உள்ளதாகவும் ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

06.01.22:

கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜிஎஸ் சமீரன் செய்தியாளர் சந்தித்து பேசினார்.கொரோனா தொற்று கோவையில் அதிகமாக பரவி வரும் நிலையில் கோவையில் 06.01.22 இரவு 10 மணி முதல் காலை 5 வரை ஊரடங்கு இருக்கும்,வருகின்ற 9 ஆம் தேதி முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்றார்.

Video:Dr.Sameeran,collector,coimbatore

1 முதல் 9 ஆம் வகுப்பு மற்றும் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இருக்காது எனவும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோவையில் கொரோனா ஒரே நாளில் 240 ஆக உயர்ந்துள்ளதால், பொது இடத்தில் கொரோனா விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்றார். மேலும் கோவை மாவட்டத்தின் மாநில எல்லை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்

கொடீசியா அரங்கில் 350 படுக்கைகள் உள்பட மாவட்டத்தில் 2730 படுக்கைகள் உள்ளதாகவும், தற்போது படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தயார் நிலையில் உள்ளது எனவும் ஆட்சியர் தெரிவித்தார். மேலும் 99 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் கொள்ளவு தயார் நிலையில் உள்ளதாகவும்
2750 ஆக்ஸிஜன் கான்சன்ரேட் தயாராக இருப்பதாக கூறினார்.

கொரொனா பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டு அறை மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் எனவும்,கடந்த வாரத்தில் ஒமைக்ரான் தொடர்பாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் 5300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

1400 க்கும் மேற்பட்டோருக்கு பொது வினியோக கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கப்பட்டு, கூட்டம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எஸ் ஜீன் வகை தொற்று தொடர்பாக கோவையில் மூன்று பேரின் சோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சமூக பரவல் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்ககபட்டுள்ளதாகவும்,மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *