ஜூனியர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டனாக பிரவீன் தேர்வு.

கோவை 19.07.22:
19 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைவராக, பிரவீன் தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உதகையைச் சேர்ந்த பிரவீன் தியாகராஜன், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, பல சோதனைகள், தோல்விகளுக்கு மத்தியிலும், மிகுந்த ஈடுபாட்டுடன் கிரிக்கெட் பயிற்சியில் பங்கு பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.

கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிகழ்நிலை பல்கலைக்கழகத்தில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தமிழ்நாடு கிரிக்கெட் ஜூனியர் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட பிரவினை, காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பாராட்டி, மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்து தெரிவித்தார்.

வருங்காலத்தில் இந்திய அணியில் இடம்பெற்று கிரிக்கெட் விளையாட்டில் உலகப் புகழ் பெற வாழ்த்தினார். பிரவீன் தியாகராஜனுக்கு முழு கல்வி கட்டண சலுகை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி விளையாட்டில் மாநில மற்றும் தேசிய அளவில் இடம் பிடிக்க உறுதுணையாக இருக்கும்.

மாணவர் பிரவினை பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், டிரஸ்டி சாமுவேல் தினகரன், பதிவாளர் எலஜா பிளசிங் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *