கோவையில் 15 குழந்தைகள் 12 மணி நேரத்தில் வெவ்வேறு விதமான தனிநபர் உலக சாதனைகளை நிகழ்த்தினார்கள்.

06.12.21:

சாய்பாபா காலனி பகுதியில் லிட்டில் இண்டிகோ அகாடமி கடந்த ஒன்பது வருடங்களாக இயங்கி வருகிறது.இங்கு 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக 15 வெவ்வேறு தலைப்புகளின் கீழ் இரண்டு வயது முதல் 10 வயது உடைய குழந்தைகள் தனிநபர் உலக சாதனைகளை நிகழ்த்தினர்.

இதில் ஒரு பகுதியாக எட்டு வயது நிரம்பிய ட்ருகன்( DRUHAN) எனும் மாணவன் 146 கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை 5 நிமிடங்களில் சரியாக சொல்லி அசத்தினார் . இவ் உலக சாதனையாளர்கள் எலைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்,தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட், இந்தியன் ரெக்கார்ட் உள்ளிட்ட 4 சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளனர். இந்நிகழ்வில் இண்டிகோ கிட்ஸ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் சுபாசினி, இணை நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *