திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு.
01.12.21:
கோவை திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவர்கள், இளம் வயதிலேயே திருக்குறளில் உள்ள கருத்துகளை அறிந்து கொள்ளும் வகையில், திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்படுகிறது.
இதில், 70 மாணவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.மொத்தம், ஆயிரத்து 330 திருக்குறளையும், முழுமையாக ஒப்புவிக்கும் திறன், இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை, சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஏற்கனவே போட்டியில் பரிசு பெற்றவர்கள், மீண்டும் பங்கேற்க கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது, www.tamilvalarchithurai.com என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பங்களை, வரும் டிச.31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.