பஸ்சில் பிக்பாக்கெட் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்பு.

கோவை. நவம்பர். 22-

பெ.நா.பாளையம் பஸ்சில் ‘பிக் பாக்கெட்’ அடித்தபோது கையும், களவுமாக பிடிபட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சின்னதடாகத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 45. இவர் கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சின்னதடாகத்திற்கு செல்லும் பஸ்சில் ஏறினார்.சின்னத்தடாகம் பஸ் ஸ்டாண்ட் அருகே வரும்போது, தனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த பயணிடம் இருந்து, 200 ரூபாயை ராஜேந்திரன் ‘பிக்பாக்கெட்’ அடித்தார். கையும் களவுமாக பிடிபட்ட அவரை பயணிகள் தடாகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராஜேந்திரனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.