மருதமலை கோவில் அடிவாரத்தில் முடிகாணிக்கை செலுத்த தனி மண்டபம்.

01.12.21:
வடவள்ளி மருதமலை அடிவாரத்தில், முடி காணிக்கை மண்டபம் கட்ட, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இக்கோவில் படிக்கட்டு பாதையில், முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளது. இவ்விடம் குறுகலாக இருப்பதால், விசேஷ நாட்களில் பக்தர்கள் நிற்க இடமில்லாமல், படிக்கட்டில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.இதனால் மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்குச் சொந்தமான, 93 சென்ட் இடத்தில், முடிக்காணிக்கை மண்டபம் கட்ட, மண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில், “மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் மற்றும் 10 குளியலறை, கழிப்பறை கட்ட, ரூ.72 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்து, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பின், டெண்டர் விடப்படும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *