கோவை. நவம்பர். 22-
சூலூர் திருச்சி ரோட்டில் விபத்துகளுக்கு காரணமான பள்ளம் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். நெடுஞ்சாலைத்துறை கவனிக்காததால் பொதுமக்களே ஒன்று சேர்ந்து பலத்தை சரி செய்தனர்.
திருச்சி ரோட்டில், சிந்தாமணிப்புதுார் சார்பதிவாளர் அலுவலகம் அருகில், தண்ணீர் தேங்கி, பள்ளம் ஏற்பட்டது.
இதனால், அந்த வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர், நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகினர். கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின. தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் தெரிவித்தும்
எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து, அப்பகுதி பா.ஜ., நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் தனியார் நிறுவனம் உதவியுடன், அப்பள்ளத்தை மூடினர். இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.