முதியவர்கள் தீபாவளி கொண்டாட்டம்

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வரும் 70க்கும் மேற்பட்ட முதியவர்கள் புத்தாடை அணிந்து கம்பி மத்தாப்பூ கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர்.இது குறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை தலைவர் மகேந்திரன் கூறுகையில் மகன்கள் மற்றும் மகள்கள் கைவிடப்பட்ட முதியவர்கள் ஆதரவற்ற நிலையில் சுற்றி வந்தவர்களை மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளது பராமரித்து வருவதாகவும், ஒவ்வொரு பண்டிகையின் போதும் விழா காலங்களிலும் அவர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து இருப்பதை உணராமல் இருக்கும் வகையில் இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்ட இவர்கள் வயதானாலும் இதுபோன்ற கொண்டாட்டங்களின் போது குழந்தைகளாகவே மாறி விடுவதாக தெரிவித்தார்