பொள்ளாச்சி வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

06.12.21:

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய 4 வனச் சரகங்களில், காலை 7 மணிக்கு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின. கணக்கெடுக்கும் குழுவினர் தினமும் வனத்துக்குள் சென்று வன விலங்குகளின் கால் தடம், எச்சம், மரங்களில் காணப்படும் நகக்கீறல்கள், விலங்குகளை
நேரில் பார்த்தல், ஒலியை கேட்டல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, ஜிபிஆர்எஸ் கருவியின் துணையுடன் கணக்கிடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

வனவர் சதீஸ் தலைமையில் வனக் காப்பாளர் ஜோஸி, வனக்காவலர் பாலையன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய வனக்குழுவினர் வில்லோனி வனச்சுற்று பகுதியில் உள்ள சித்தாறு ஓடை பகுதியில் நேற்று சிறுத்தையின் கால் தடத்தையும், மரத்தில் கரடியின் நகக்கீறல்களையும் பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *