வீட்டு வசதி திட்ட மேம்பாட்டு பட்டா.

கோவை 21.12.23 :பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு வசதி திட்ட மேம்பாட்டு பட்டவை, வருவாய் கிராம பதிவேட்டில் புதிய கோரி, கோதவாடி ஊராட்சிமன்ற தலைவர் ரத்தினசாமி,தாசில்தாரிடம் மனு கொடுத்தார்.

கிணத்துக்கடவு ஒன்றிய கோதவாடி ஊராட்சியில் 2 வது வார்டு AD காலணி பகுதியில் 70 க்கும் மேற்பட்டோர்க்கு 1995 – ல் HSD பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இந்த பட்டாக்கள் வருவாய் கிராம பதிவேட்டில் பதியப்படவில்லை. இதனால் அரசின் நலத்திட்டங்கள் பெற முடியாமலும்,  வங்கியில் கடனுதவி பெற முடியாமலும், சிரமப்பட்டு வருகின்றனர்.  எனவே பழைய HSD பட்டாவை ரத்து செய்து, தற்பொழுது உள்ள பயனாளிகளுக்கு, புதிய HSD பட்டா வழங்கி, வருவாய் கிராம பதிவேட்டில் பதித்து  கொடுக்குமாறு,கோதவாடி ஊராட்சி மன்ற  தலைவர்  கே.ஆர். ரத்தினசாமி  தலைமையில் பொதுமக்கள் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் சென்றனர்.

கிணத்துக்கடவு  வடக்கு ஒன்றிய செயலாளர் காட்டம்பட்டி. கிரி கதிர்வேல், மாவட்ட விவசாய அணி செயலாளர் கோதவாடி கே.எம்.மயில்சாமி, உடன் இருந்தனர். கிணத்துக்கடவு தாலுகா வட்டாட்சியர் சிவகுமாரை நேரில் சந்தித்து  கோரிக்கை மனு கொடுத்தனர். கிளை செயலாளர் இளங்கோவன்  மற்றும் ஜெயக்குமார் , வார்டு உறுப்பினர்கள் எம்.சிவக்குமார் , தி.செல்வக்குமார் , ராஜ்குமார் , பேக்கரி செல்வராஜ்  , திருமூர்த்தி சேமலையப்பன்  மற்றும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.கோரிக்கையை பரிசீலனை செய்து , விரைவில்  அனைவருக்கும் பட்டா வழங்குவதாக தாசில்தார்  தெரிவித்தார் .