ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி அறிவியல் கண்காட்சி.

கோவை 28.2.24 : தமிழ் பாரம்பரிய பண்டைய கால கோவில்களின் சிறப்பு, அஞ்சறைப் பெட்டி,பாரம்பரிய உணவு வகைகள், விளையாட்டுகள், மூலிகைச் செடிகள் என தமிழர் பாரம்பரிய வாழ்க்கை முறையை கண்முன் நிறுத்திய கோவை அறிவியல் கண்காட்சி.

கோவையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில்,
அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், துறை சார்ந்த மாதிரிகளோடு பண்டைய கால தமிழ்பாரம்பரிய வாழ்க்கை முறையை காட்சி படுத்திய அறிவியல் கண்காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது..

கோவையில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்றது..
அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இதில், மழலையர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் , அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் அறிவியல் படைப்புகளையும் மாதிரிகளையும் உருவாக்கித் தங்கள் தனித் திறன்களை வெளிக்காண்பித்தனர்-

இதில் காற்றாலை மின்உற்பத்தி, எரிமலைகள் இயங்கும் விதம், சூரியக் குடும்பம், மண் அரிப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் புதுவகையான மாதிரிகள் செய்து கண் காட்சியில் காட்சிப்படுத்தினர்.மேலும் நமது தமிழ் பாரம்பரிய பண்டைய கால கோவில்களின் சிறப்பு, அஞ்சறைப் பெட்டி, பாரம்பரிய உணவு வகைகள், விளையாட்டுகள், மூலிகைச் செடிகள் என தமிழர் பாரம்பரிய வாழ்க்கை முறையை கண்முன் நிறுத்தும் விதமாக காட்சி படுத்தியிருந்தனர்.. கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களைத் தேர்வு செய்து பரிசுகளையும், சான்றிதழ்களையும், பாரதியார் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பேராசிரியர் டாக்டர். உதயகுமார் மற்றும் பேராசிரியர் டாக்டர். தனசேகரன் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.