கோவை அரசு கலைக்கல்லூரியில், பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் சார்பில், இரண்டு நாள் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடைபெற்றது.
கோவை 23.8.24:
இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் மிசைல்கள், போருக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகள், ராணுவ செயற்கைக்கோள், போர்க்கப்பல்கள், பெயிலி பாலத்தின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ராணுவம் மற்றும் மீட்பு பணித்துறை குறித்து பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த கண்காட்சியானது நடைபெற்றது.
கோவை அரசு கலை கல்லூரியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த டிபென்ஸ் டிகிரி படிப்புகள் உள்ளன.இந்த துறை படித்தவர்களுக்கு ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.