சிறு குறு தொழில் களை பாதுக்காக்க நடைபெறும் போராட்டத்தில் டாக்ட் சங்கம் முழு ஒத்துழைப்பு! நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு!
18.12.21:
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் பிரதாப் சேகர், பொருளாளர் லீலா கிருஷ்ணன், முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

தொழில்துறைக்கு தேவைப்படுகின்ற மூலப் பொருள்களின் விலை உயர்வு கடந்த ஒரு, ஆண்டுகளுக்கும் மேலாக 100 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில்துறை கொரோனா தொற்றின் காரணமாக, மெல்ல மெல்ல மீண்டு வர தொடங்கியுள்ளது. கடுமையான மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் மீண்டும் பாதிக்கப்பட்டு, உற்பத்தி சார்ந்த தொழில் துறையினர் 70 சதவீதத்திற்கும் கீழ் தங்கள் உற்பத்தியை குறைத்து கொண்டதால் , உற்பத்தித்துறை சரிந்து, ஜாப் ஆர்டர்கள், உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் தொழிற் கூடங்கள், 95 சதவிகிதம் பேர் கடந்த ஒரு ஆண்டு களுக்கு மேலாக ஆர்டர்கள் இழந்து செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

குறுந்தொழில் நிறுவனங்கள், வங்கி கடன், தனியார் கடன், இட வாடகை, தொழிலாளர்களின் சம்பளம், என எதுவும் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு தொழிலை கைவிடும் நிலையில் உள்ளனர். நாட்டில் கிட்டத்தட்ட 40 கோடி பேர்களுக்கு மேல் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கி வருகின்ற இந்த தொழில்களை பாதுகாக்க, மூலப் பொருள்களின் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த, விலை நிர்ணய கமிட்டி அமைக்க, கோரி வருகின்ற 20.12.2021 அன்று நாடு முழுவதும் ஒருநாள் தொழில் கூடங்கள் அடைக்கும் போராட்டத்தில் டாக்ட் சங்கமும் பங்கெடுக்க உள்ளது என நிர்வாகிகள் முன்னிலையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறுந்தொழில்கள் நடத்தி வருகின்ற அனைத்து தொழில் கூடங்களும் அன்றைய தினம் அடைத்து, காலை 10 மணிக்கு கோவை மாவட்டம் பந்தய சாலை பகுதியில் உள்ள தெற்கு தாசில்தார் அலுவலகத்தின் முன்பு தொழில் அமைப்புகள் நடத்துகின்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுப்பது என ஏகமனதாக முடிவு செய்வதாக இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், இந்த அமைப்பின் துணை தலைவர்கள் விஸ்வநாதன், சக்திவேல், பாரத் ரவி, ராஜேந்திரன், சண்முகசுந்தரம், தங்கராஜ், என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *