
கோவை 18.03.25: வெள்ளியங்கிரி மலையில் திடீர் சுழிக் காற்று:
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினமும் வருகை புரிகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டும் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.
கோடை காலம் என்பதால், தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், வெள்ளியங்கிரி மலையின் உச்சியில் திடீரென சுழிக் காற்று உருவானது. இதனை சற்றும் எதிர்பாராத பக்தர்கள், சில நிமிடங்கள் மெய் மறந்து நின்றனர். பின்னர், தங்களது செல்போன்களில் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திடீரென்று ஒரு இடத்தில் மிகுந்த வெப்பம் குறைவதால், அந்த இடத்தில் உள்ள காற்று குளிர்ந்து சுற்றி,தரையில் இருக்கும் இலை, தழைகள் காற்றில் மேல் நோக்கி கொண்டு செல்லும்..இதைச் ‘சுழி காற்று’ என்று கூறுவர். அறிவியல் வளர்ச்சியில்லாத பழங்காலத்தில் இக்காற்றைப் பேய்க்காற்று என்று மக்கள் நம்பினர்.
மலைப் பகுதியில் இதுபோன்ற எதிர்பாராத சூழல் மாற்றங்கள் ஏற்படுவதால், பக்தர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.