ஜூலை 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இடி,மழை.
click for live video.
ஜூலை 19:
அரபிக் கடலில் நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஓமன் கடற் பகுதி நோக்கி நகர்கிறது.இதனிடையே ஒடிசா,மத்திய பிரதேசம்,உத்தரப்பிரதேசம் தரைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி,தமிழகம் நோக்கி நகர்கிறது.இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் கொண்டு,கேரள மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில்,அடுத்து வரக்கூடிய நாட்களில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என செயற்கைக்கோள் காட்சிகள் காட்டுகின்றன.
ஜூலை 19 மற்றும் 20ஆம் தேதிகளில் தமிழகத்தின் சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி,நாமக்கல்,வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, கடலூர்,அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக ஆங்காங்கே மழைப்பொழிவு காணப்படும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரியில் தொடங்கி கோவை, வால்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம், விருதுநகர் மாவட்டம், தென்காசி மாவட்டம் உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் மிக கனமழை பொழியக் கூடும்.
ஜூலை 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெப்பச்சலன இடி மழை எதிர்பார்க்கலாம்.கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெப்பக் காற்று வீசி வந்தது. இதனை குளிர்விக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 27ஆம் தேதி வரை பரவலாக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.பெறக்கூடிய மழையினை சேமித்து,வானிலை அறிவிப்பினை கொண்டு, விவசாயிகள் அவர்களது பணிகளை திட்டமிட்டு மேம்படுத்திக் கொள்ளவும்.