kovai 26.09.22:
தேசிய புள்ளி விவர அலுவலகம் ஒருங்கிணைக்கப்படாத,அமைப்பு சாரா நிறுவனங்களின் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்றை துவங்கவுள்ளது.இந்த ஆண்டுக்காண கணக்கெடுப்பு,அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை,ஒரு வருடகாலத்திற்கு நடத்தப்படவுள்ளது.
புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளி விவர அலுவலகம் 1950 ஆம் ஆண்டு முதல் இந்திய மக்கள் தொகை மற்றும் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தேசிய மாதிரி கணக்கெடுப்பு எனப்படும் பெரிய அளவிலான மாதிரி ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதற்கான பயிற்சி முகாம், கோவையில் நடைபெற்றது. இதனை தேசிய புள்ளி விவர கோவை மண்டல அலுவலக இயக்குனர் விபீஷ் துவக்கி வைத்தார்.
தேசிய மாதிரி ஆய்வுகள் இந்திய மக்கள் தொகை, பொருளாதாரத்தின் முக்கிய குணாதிசயங்களைக் கண்காணித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் புள்ளியியல் அளவைகளை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளன.உள்நாட்டு பொருளாதாரத்தில் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பிறசேவைத் துறைகளைச் சேர்ந்த ஒருங்கிணைக்கப்படாத,அமைப்பு சாரா விவசாயம் அல்லாத நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்குதல் உள்ளிட்ட துறைகளில் இவ்வகை அமைப்பு-சாரா நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்ததுறைகள் தொடர்பான நம்பகமான மற்றும் விரிவான புள்ளி விவரங்கள் மிகவும் இன்றியமையாதவை.
இந்த வகையில் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பிறசேவைகளில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைக்கப்படாத.அமைப்புசாரா [விவசாயம்மற்றும்கட்டுமானம்தவிர்த்து] நிறுவனங்களின் பொருளாதார மற்றும் செயல்பாட்டு பண்புகள் குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படும்.தேவையான புள்ளி விவரங்களை சேகரிக்க தேசிய புள்ளி விவர அலுவலகத்தின் நன்கு பயிற்சி பெற்ற அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு வருகைதந்து, அங்கு அமைந்துள்ள நிறுவனங்கள், வீடுகளை அணுகுவர்.
இந்த கணக்கெடுப்பின் வெற்றி, தொழில் முனைவோர் மற்றும் பொது மக்களின் முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியமாகும். நம்பகமான தகவல்களை வழங்கவும், தேசத்தின் முன்னேற்றத்தில் பங்களிக்கவும் பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோரிடம் தேசிய புள்ளி விவர அலுவலகம் முறையிடுகிறது. இவ்வாறு பெறப்படும் தகவல்கள் திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தகவல்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்படுகிறது.
இந்த சுற்றில் இருந்து வெளி வரும் முடிவுகள், அமைப்புசாரா [விவசாயம்மற்றும்கட்டுமானம்தவிர்த்து] நிறுவனங்களின் தற்போதைய பொருளாதார மற்றும் செயல்பாட்டு பண்புகளைப் புரிந்து கொள்ளவும், தேசிய வருமானம், மூலதன உருவாக்கம் ஆகியவற்றில் அவற்றின் பங்களிப்பை மதிப்பிடுவதற்கும் உதவும். கணக்கெடுப்பு முடிவுகளின் உதவியுடன் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம்,சிறுமற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவைகளை உணர உதவும்.
இந்த பயிற்சி முகாமில் இணை இயக்குனர் விஷ்ணுராஜ், முதுநிலை புள்ளியல் துறை அலுவலர்கள் திருமதி கவிதா, திரு ஸ்டாலின், திரு ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.