தொழிலாளிகளின் அடையாளம் அட்டை பதிவு முகாம்
27.11.21:
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் டாக்ட் சங்கமும் ,
அமைப்புசார தொழிலாளர் நலத்துறையும் இனைத்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளிகளின் அடையாளம் அட்டை பதிவு முகாம் 26.11.2021ல் இடையர் பாளையத்தில் உள்ள
V.R.G.திருமணமஹாலில் டாக்ட் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.இந்த முகாமில் ESI இல்லாத குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதல் கட்டமாக 300 பேர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.இந்த முகாமில் பொதுச் செயலாளர் G.பிரதாப்சேகர் வரவேற்ப்புரை நிகழ்த்தினர்.நிகழ்ச்சி துவக்கிவைத்து பயனாளிக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கினார். டாக்ட் சங்கத்தின் பொருளாளர் M.லீலாகிருஷ்ணன்,துணை தலைவர்கள் P கார்த்திகேயன், S.பாரத்ரவி மாவட்ட செயலாளர்கள்
முருகன் முன்னிலை வகித்தார்கள்.நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் கண்ணன், திபாபாரதி
பொன்சத்தியபாமா அலுவலர் சுரேஷ் பங்கேற்றார்கள்.