மாரடைப்பு ஏற்பட்டால் மக்களே பயன்படுத்தும் கருவி!   

கோவை 19.03.25:
தீடீரென ஏற்படும் மாரடைப்பில் இருந்து காக்கும் PAD எனும் இயந்திரம்,
வாகராயம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுவப்பட்டது.
லட்சுமி ரிங் டிராவலர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக,கோவை மாவட்டம்  வாகராயம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று PAD எனப்படும், ஒரு பொது அணுகல் டிஃபிபிரிலேட்டர்  நிறுவப்பட்டுள்ளது.
பொது இடங்களில் அவசரகாலத்தில் ஏற்படும் மாரடைப்பில் இருந்து உயிர்  காக்க உதவும்.மாரடைப்பு ஏற்பட்டால்,அருகே இருக்கும் ஒரு சாதாரண பொது மக்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி உயிர் காக்க முடியும்.வாகராயம்பாளையம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் அனைத்து உழியர்களும் இந்த இயந்திரத்தை பயன்படுத்த பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த PAD இயந்திரம் நிறுவும் நிகழ்வில் ,கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கே. பவன்குமார், அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் திரு. ரவி சாம், அரசு சாரா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு. ராஜேஷ் ஆர். ட்ரேவேதி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் பாலுசாமி, LRT இன் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கே.எஸ். ராஜேந்திரகுமார் மற்றும்  மோப்ரிபாளையம் பஞ்சாயத்துத் தலைவர் உயிர் கே. பி. சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.