12 நாடுகளில் இருந்து கோவை வந்த 70 பேர் தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பு.
06.12.21:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பல்வேறு வகையிலும் உருமாற்றம் அடைந்து தற்போது ஒமைக்ரான் என்ற பெயரில் புதிய வகை தொற்று பரவி வருகிறது.உலக சுகாதார நிறுவனம் தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், போட்ஸ்வானா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட 5 நாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை இயக்குனர் அருணா கூறினார்.தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட மத்திய அரசு அறிவித்துள்ள 12 நாடுகளிலிருந்து 70 பேர் கோவை வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நோய் தொற்று பாதிப்பு இல்லை.இருப்பினும் 70 பேரையும் 7 நாள்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.