ஏப்ரல் 22,23,24 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் பரவலாக மழை பொழிவு.
கோவை 22.04.22:
வங்கக்கடலை மையமாகக் கொண்டு, உயர் அழுத்தம் நீடித்து வருகிறது. வானிலை மைய ஆய்வின் படி தற்போது மேற்கு திசையிலிருந்து காற்று வீசுகிறது. இந்த காற்று தமிழகத்தில் கரை ஏறும் போது மேலடுக்கு சுழற்சி ஆக திசை மாற வாய்ப்பு இருப்பதாக செயற்கைக்கோள் காட்சிகள் காட்டுகின்றன. இதனால் ஏப்ரல் 22 23 24 ஆகிய மூன்று நாட்கள் தமிழகத்தில் பரவலாக மழை பொழிவு காணப்படும். எந்தெந்த மாவட்டத்தில் மழை பொழிவு என்பதை இப்போது பார்க்கலாம்.
22ஆம் தேதி வெப்பச் சலனத்தால் தொடங்கும் மழை கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள், தென்காசி,திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை கொடுக்கும். இதற்க்கு அடுத்ததாக தூத்துக்குடி, விருதுநகர்,திண்டுக்கல்,மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு ஆங்காங்கே இருக்கும். டெல்டா மாவட்டங்களை பொருத்தவரை நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பொழிவு இருக்கும்.இதே போல மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 22 23 24 ஆகிய மூன்று நாட்கள் வெப்பச் சலனத்தால் பொழியும் இந்த மழை, மாலை மற்றும் இரவு நேரத்தில் பொழியக் கூடும். அதிகாலை நேரத்திலும் மழை பொழிவு இருக்கும். அதேநேரத்தில் பகல் பொழுதில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும். ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழைப்பொழியும். தமிழகத்தில் ஆங்காங்கே வெப்பச்சலன மழை பொழிவு இருந்தாலும், பகல் நேர வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும்.
எனவே பகல் 12 முதல் 4 மணி வரை வெயிலலில் சுற்றுவதை தவிர்க்கவும். நீர் சத்துகளை கொடுக்கக்கூடிய பழவகைகளை, பழச்சாறுகள் அருந்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் 25ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதுமே வெப்பம் அதிகரித்து காணப்படும்.