அக்டோபர் 27ஆம் தேதி வானிலை அறிக்கை .வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பொழியும். அதே போல மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பொழியும். மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை நாளை முதல் வேகமெடுக்கும் இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அரபிக்கடலில் மாலத்தீவு மற்றும் கேரளா இடையே காற்று சுழற்சி நீடிக்கிறது. இதனால் கிழக்குக் காற்று ஈர்க்கப்படுவதால் மேற்குதொடர்ச்சிமலை மாவட்டங்களில் கன மழை பொழியும் .இந்த இரண்டு வானிலை அமைப்புகளால் இருபத்தி ஏழாம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நல்ல மழை பொழிவு இருக்கும். ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பொழியும்.28 அம் தேதி முதல் தமிழகம் முழுவதும் படிப்படியாக மழை அளவு அதிகரிக்கும். கிடைக்கும் மழைநீரை சேமித்து சூரிய ஒளி படாமல் பத்திர படுத்தினால் ஆறுமாதத்திற்கு தண்ணீர் கெடாது. எனவே மழை நீரை சேமிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *