தீபாவளி பண்டிகை வருகிற 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி வெளியூர்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இதனால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும் இதனை தவிர்ப்பதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், தர்மபுரி, நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதேபோல சிங்காநல்லூர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், நெல்லை, ராஜபாளையம், குமுளி, தேனி, ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 30-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து திருச்சி, மதுரை, தேனி, சேலம், உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் சார்பில் கொடிசியா வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த தற்காலிக பஸ் நிலையம் வருகிற 30-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கொடிசியா தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சேலம் மற்றும் சேலத்தை கடந்து செல்லும் வழித்தட பஸ்கள், திருச்சி மற்றும் திருச்சியை கடந்து செல்லும் வழித்தட பஸ்கள் ஆகியவை இங்கு இருந்து இயக்கப்படுகிறது.
இங்கே பஸ்கள் நிறுத்தும் இடம் தற்காலிக நிழற்குடை குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி நடந்து வருகிறது. இதேபோல சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் மதுரையைச் சார்ந்த வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் மற்றும் தேனி மற்றும் தேனியை கடந்து செல்லும் பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளது.
இது போல பொள்ளாச்சியில் உள்ள புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பொள்ளாச்சியில் இருந்து சேலம் மதுரை திருச்சி தேனி போன்ற பணிகளுக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.