கோவை 22.11.21:
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்கா சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காலிங்கராயன் குளம் பிரதான நீர் ஊட்டு குளமான கீரணத்தம் பகுதியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒட்டன் குட்டை மழை நீரால் நிரம்பியது. இதனால் காலிங்கராயன் குளத்திற்கும் 30 சதவீத தண்ணீர் வந்து சேர்ந்தது. இதைக் கொண்டாடும் வகையில் இன்று ஒட்டன் குட்டையில் பரிசல் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் ஒட்டன் குட்டை நிரம்பியது.
கோவை மாவட்டம் வடக்கு பகுதியில் பல ஏரி, குளம், குட்டைகள் இருக்கிறது. இருப்பினும் பல ஆண்டுகளாக அவை தண்ணீரை காணாமல் வறட்சியான பகுதியாகவே காணப்படுகிறது. இதற்கு அந்த பகுதியின் மிக முக்கிய மழைநீர் வடிகாலான கௌசிகா நதியின் நீர்வழிப்பாதைகளில் மழைநீர் வராததும் ஒன்று.இத்தகைய நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் சுமார் 16ஏக்கர் பரப்பளவிலான கீரநத்தம் ஒட்டன் குட்டை நிரம்பியது. அதன் முழு கொள்ளவை எட்டி காலிங்கராயன் குளம் நோக்கியும் பயணித்தது.
வறட்சியான கோவை வடக்கு பகுதியில் நீர் நிரம்பிய ஒரு நீர்நிலையாக உள்ள ஒட்டன் குட்டையில் கௌசிகா நீர்கரங்கள் அமைப்பினரால் பரிசல் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இயற்கைக்கு மலர் தூவி நன்றி செலுத்தினர்.கோவை வடக்கில் பரிசல் பயணம் செய்த முதல் நீர்நிலையாகவும் இது கருதப்படுகிறது.
இதற்கான நீர் வழிப்பாதைகள் இடிகரை பேரூராட்சியில் அமைந்துள்ளது. அவற்றை முறையாக பராமரிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இந்த நீர்நிலை நிரம்பும் என்று ஊர் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
✍🏻 கௌசிகா நீர்கரங்கள்