market

கோவை ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் 10 ரூபாயாக குறைப்பு. ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு.

26.11.21:
கொரோனா தொற்று காரணமாக சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம் & ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் நடைமேடை டிக்கெட் கட்டணம் ஒரு நபருக்கு 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் இந்த கட்டண உயர்வை திரும்ப பெற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை முதல் சேலம் ஈரோடு திருப்பூர் கோவை கரூர் ஆகிய 5 ரயில் நிலையங்களிலும் முன்பு போல் பிளாட்பார்ம் கட்டணம் 10 ரூபாய் ஆக மட்டுமே வசூலிக்கப்படும். அதே நேரத்தில் பயணிகள் மத்தியில் சமூக இடைவெளி போன்ற தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்குமாறு சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவிப்பு.