02.12.21:
கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை, பாடத்திட்ட பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.கொரோனா தொற்று காரணமாக 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்., மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. பாடத்திட்டம், 35 முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டன.மாதவாரியாக நடத்தி முடிக்க வேண்டிய சில பகுதிகள்,அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, வாரத்தில் ஆறு நாட்கள் வரை பள்ளிகள் செயல்பட்டன.அந்தந்த பள்ளிகளில் மாதத்தேர்வுகள் நடத்திய நிலையில், மாவட்ட தேர்வுக்குழுவால், பொது வினாத்தாள் பாணியில், திருப்புதல் தேர்வுகள் முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஒன்பது, பத்து, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், முதற்கட்டமாக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு வரும், ஆறாம் தேதி முதல், 10ம் தேதி வரை ஒரு பிரிவாகவும், 11ல் இருந்து, 16 ம் தேதி வரை ஒரு பிரிவாகவும், தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், வரும் 6ம் தேதி முதல், 13ம் தேதி வரை, திருப்புதல் தேர்வு நடத்தப்படும். தேர்வுகள் அனைத்தும் மதியம், 2:30 முதல், 4:00 மணி வரை நடத்த வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.