health

I.R.I.A இமேஜிங் அசோசியேஷன் கருத்தரங்கம்.
18.12.21:

கோவையில் நடைபெற்ற ஐ.ஆர்.ஐ.ஏ.74 வது வருடாந்திர கருத்தரங்கில், தமிழகம் மற்றும் புதுவை மருத்துவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

கோவையில் தமிழ்நாடு பாண்டிச்சேரி இந்திய கதிரியிக்க மற்றும் இமேஜிங் அசோசியேஷன் எனும் ஐ.ஏர்.ஐ.ஏ.யின் 74 வது கருத்தரங்கம், கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.இமேஜிங் டிகோடெட் 2021 எனும் தலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் இதில்,தலைமை விருந்தினராக ஐ.ஆர்.ஐ.ஏ.தேசிய தலைவர் அமர்நாத் கலந்து கொண்டார்.சிறப்பு அழைப்பாளர்களாக பி.எஸ்.ஜி.பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன், முதல்வர் சுப்பாராவ்,ஐ.எம்.ஏ.தமிழக தலைவர் டாக்டர் பழனிசாமி,ஐ.ஆர்.ஐ.ஏ.செயலாளர் சந்தீப் கவ்தாலே ,அமைப்பு தலைவர்கள் மருத்துவர்கள் அன்பரசு, தேவானந்த்,அமைப்பு செயலர்கள் மருத்துவர்கள் முரளி கிருஷ்ணா,செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் தமிழகம்,புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கதிரியிக்கம் மற்றும் இமேஜிங் சிகிச்சை மருத்துவர்கள்,வல்லுனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இதில்,கதிரியிக்க துறையின் பல்வேறு நவீனத்துவங்கள் குறித்து துறை சார்ந்த வல்லுனர்கள் பேசினர்.தொடர்ந்து, இந்த ஆண்டில் பல்வேறு நிலைகளில் செயல்பட்ட துறை சார்ந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.