market

பிளாஸ்டிக் குட்பை என்ற வாசகத்துடன், தங்கத்தில் மஞ்சள் பை தயாரித்து நகை பட்டறை உரிமையாளர் ஒருவர் அசத்தி உள்ளார் .

26.12.21:

கோவை செட்டி வீதி அசோக் நகரை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளரான மாரியப்பன்(40) என்பவர் தங்கத்தில் மஞ்சள் பை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாரியப்பன் தன்னுடைய நகை பட்டறையில் 100 மில்லி கிராம் தங்கத்தில் ஒரு மஞ்சள் பையும், 500 மில்லிகிராமில் ஒரு மஞ்சள் பையையும் வடிவமைத்துள்ளார்.

தற்போதைய தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக மஞ்சள் பை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனது. அதற்காக 100 மில்லி கிராமில் மஞ்சள் பையை வடிவமைத்துள்ளார். இதில் மீண்டும் மஞ்சள் பை பிளாஸ்டிக்குக்கு குட்பை வசனம் எழுதப்பட்டுள்ளது. இந்த தங்க மஞ்சள் பைகளை தேவைப்பட்டால் அவரது கடையில் வாங்கிக் கொள்ளலாம்.