வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர ஜூலை 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கோவை ஜூலை 9:

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு வேளாண் பல்கலை இணைப்பில் செயல்படும், 18 உறுப்பு கல்லுாரிகளில் 2,148 இடங்களுக்கும்,இணைப்பு கல்லுாரிகளில் பயிற்றுவிக்கப்படும் 12 இளநிலை அறிவியல் டிப்ளமா படிப்புகளில் 2,337 இடங்களுக்கும், ‘ஆன்லைன்’ வழியில் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை ஆகியவற்றில், தமிழ் மற்றும் ஆங்கில வழி மற்றும் வனவியல், உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல்; பி.டெக்.,கில் உணவு தொழில்நுட்பம். உயிரி தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், வேளாண் வணிக மேலாண்மை ஆகியவற்றுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கி உள்ளது. விண்ணப்பதாரர்கள், https://tnau.ucanapply.com என்ற இணையதளத்தில், வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப பதிவுக்கான நடைமுறை, மாணவர் சேர்க்கை விதிகள் உள்ளிட்டவை குறித்து, www.tnau.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு, 042 – 26611322, 0422- – 6611328, 042 – 26611345, 042 – 2-6611346 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், ugadmissions@tnau.ac.in என்ற இ- – மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *