business

தமிழர்களின் பாரம்பரிய விவசாய முறைகள் நவீனமயமாகி உள்ளது. தற்காலத்திற்க்கு ஏற்றது போல,வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி அதிக மகசூல் கிடைக்கிறது.

click for live video
கோவை 18.07.22:
இணைய தள வளர்ச்சியின் அடுத்த பரிமாணமாக ,செயற்கை நுண்ணறிவு,மனித நாகரிக வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு செயற்கை நுண்ணறிவு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.செயற்கை நுண்ணறிவு விவசாயத்துறையில், மனித வேலைகளை சுலபமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.இதன் தொழில் நுட்பத்தை விளக்குகிறார் farmagain நிறுவனர் பெஞ்சமின் ராஜா.

மன்னுடைய ஈரப்பதம் 24 மணி நேரமும் ஒரு சரியான அளவுல இருந்ததுன்னா, ஒளிச்சேர்க்கை ரொம்ப நல்லா இருக்கும். ஒளிச்சேர்க்கை நல்லா இருந்ததுன்னா நியூட்ரிசன் எடுக்கிறது நல்லா இருக்கும்.இது சரியா இருந்தால் தாவர வளர்ச்சி சரியாக இருக்கும். வெப்பநிலை, சூரிய சக்தி, விண்டு வெலாசிட்டி, மாறாமல் சீராக கிடைக்க இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலமா விவசாய பூமியில் எந்த பயிருக்கு எந்த நேரத்தில் தண்ணீர் தேவை?உரம் தேவை?பூச்சி மருந்து தேவை?இது போன்ற தகவல்களை சேகரித்து சரியான நேரத்தில்,சரியான விகிதத்தில் கோடுக்க முடியும் என்பதே இத்தொழில்நுட்ப வெற்றி. விவசாயத்துல புதுமைகளை கொண்டு வர்றதுல கொஞ்சம் பின்தங்கி இருக்கிறோம். இந்த தொழில்நுட்பத்தில் ஒரு ஏக்கரில் 84 டன் தக்காளி உற்பத்தி செய்ய முடிஞ்சது.கரும்பு ஒரு ஏக்கரில் 106 டன் விளைச்சல் தந்தது. தென்னை விவசாயத்தில் ஒரு மரத்துக்கு 300 காய்களுக்கு மேல எடுக்க முடியும் என்றார்.

மழை,வெயில்,குளிர்,வெப்பநிலை போன்ற கால நிலைமாற்றம்,இடத்திற்க்கு இடம் மாறுபடும்.இதனை துல்லியமாக கணக்கிட்டு லாபகரமான விவசாயத்தை,வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கிறது செயற்கை நுண்ணறிவு விவசாய முறை.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை அரசு பயன்படுத்தி, விஞ்ஞான வேளாண்மையை ஊக்கப்படுத்தி,விவசாயிகளுக்கு தேவையான நீரோட்டம் போல உடன் சென்றால்,நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயம்,உலகின் உணவு தேவையை பூர்த்தி செய்யும்.மண் கொடுத்த விளை பொருட்களை,மகத்துவம் மாறாமல் இயற்கையுடன் ஒன்றி விவசாயம் செய்வோம்.செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில்.
நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம். நாகரீக உலகில் ,நவீன தொழில்துட்பம் பயன்படுத்தி பதிய பரிமாணம் பெற்று வருகிறது வேளாண் துறை.