weather


கோவை. நவம்பர். 15:
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொள்ளும். இதன் காரணமாக கன்னியாகுமரி உள்பட 20 மாவட்டங்களில் இன்றும், 16 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 18-ம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக வடமாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் அதேபோல புதுச்சேரி காரைக்கால் நகரங்களிலும் கனமழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மிதமான மழை பெய்யும். நாளை நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.