Aanmeegam

இன்றைய ராசிபலன்
மேஷம்: இன்றைய நாள் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். குடும்பத்துடன் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போங்கள். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

கடகம்: பேச்சால் பல பிரச்னைகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம்கிட்டும் நாள்.

சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. கனவு பலிதமாகும் நாள்.

கன்னி: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்: அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.
Rasi palan