aanmeegam

கோவையில் நடைபெற்ற தேரோட்டம்.
வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
மாடுகள்,குதிரைகள் நடனமாடியபடி ஊர்வலம்.

கோவை 11.07.22:

கோவையில் நடைபெற்ற பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் திருத்தேர் விழாவில் மாடுகள், குதிரைகள் நடனமாடி அணிவகுத்து சென்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவை விளாங்குருச்சி பகுதியில் 100ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுற்று வட்டார மக்களின் காவல் தெய்வமாக திகழும் இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா விமர்ச்சியாக நடைபெறும். அதே போல இந்த ஆண்டு ஐந்தாம் வருடாபிஷேக விழா மற்றும் திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அலங்கரிக்கப்பட்ட தேரில் பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியலித்தபடி திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பறை சாற்றும் விதமாக சிவ வாத்தியம் ஜமாப் இசைகள் முழுங்க, மாடுகள், குதிரைகள் நடனமாடியபடி அணிவகுத்து சென்றது பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது.