கல்லூரியில் பயிலும் மாணவிகள் கல்வியுடன் தொழில் நுட்ப முறை சார்ந்த கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக கோவை அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம் மற்றும் CADD க்ளவுட் கேம்பஸ் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது…
கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்வி நிறுவனம், இந்திய அளவில், பெண்கள் கல்வி . நிறுவனத்திலேயே தலை சிறந்த கல்வி நிறுவனத்தில் ஒன்றாக இருக்கிறது . இதில் பொறியியல் இயற்பியல் , கணக்கீட்டு பதவியல், தகவல் தொழிநுட்பம் , வணிக நிர்வாகம் வணிகம் மற்றும் மேலாண்மை என பல்வேறு துறைகளில்,பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்ட்டுள் ளன.இந்நிலையில்,மாணவிகளின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தொழில் நுட்ப திறனை மேம்படுத்தும் விதமாக, மெக்கானிக்கல், கட்டிடக்கலை . மேலாண்மைத்துறை,எலக்ட்ரானிக்ஸ் என தொழில்நுட்ப துறைகளில், மிகச்சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கி வரும், CADD ( CloudKampus ) நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதற்கான நிகழ்ச்சி அவினாசிலிங்கம் கல்வி நிறுவன அரங்கில் நடைபெற்றது.பல்கலைகழக வேந்தர் பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இதில்,CADD நிறுவனத்தின் தலைவர் பார்த்தசாரதி கலந்து கொண்டு இருவரும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்ச்சியில்,துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி,பதிவாளர் கவுசல்யா,முனைவர் முருகேசன்,சித்ரா பார்த்தசாரதி உட்பட கல்லூரி நிர்வாகிகள்,பேராசிரியர்கள்,உட்பட பலர் கலந்து கொண்டனர்…