கோவை 14.08.23:
கோவை சுங்கம் பகுதியில் அமைந்துள்ள கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 59 வது ஆண்டு விழா ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இதற்காக பள்ளி முழுவதும் அலங்கார மின் விளக்குகள் பெற்றோர்களை வரவேற்றன. மின் அலங்கார வளைவுகளில் நின்று பெற்றோர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கோவை மறை மாவட்ட மேதகு ஆயர் எல் தாமஸ் அக்வினாஸ், கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஏ ஸ் ஜான் ஜோசப், பள்ளியின் முன்னாள் மாணவரும் சிறப்பு விருந்தினமான டாக்டர் வி அரவிந்தன் பள்ளியின் 59 வது ஆண்டு விழாவில் விருந்தினர்களாக பங்கேற்ற சிறப்பித்தனர். அரசு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கும்,அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.
குழந்தைகள் நடனத்துடன் தொடங்கிய கலை நிகழ்ச்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. சினிமா பாடல்களுக்கு மாணவ மாணவிகள் ஆட்டம் போடாமல், பல கருத்துக்களை எடுத்துச் சொல்லும் விதமாக காட்சி அமைப்புகளை வடிவமைத்து அரங்கேற்றி இருந்தது அனைவரையும் கவர்ந்தது. அரசர்களில் சிறந்த அரசன் பாரியின் கதை தத்துரூபமாக நிகழ்த்திக் காட்டினார்கள். மாணவர்கள் நடத்திய நாடகங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில், பின்புலத்தில் அமைக்கப்பட்டிருந்த எல் இ டி திரையில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் நாடகங்களை மெருகேற்றியது.
கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளியின் 59 வது ஆண்டு விழாவினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கண்டு ரசித்தனர். ஏராளமான அருட்தந்தைகளும், அருட் சகோதரிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பி ஆரோக்கிய ததேயூஸ் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தார்.