cinema

நம்மவரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூகத்தில் உள்ள ஏழைகளின் பசியை போக்க உணவு இல்லாதோர்க்கு உணவு அளித்து பிறகு நாம் உண்பதை எடுத்தியம்பும் வகையில் மக்கள் நீதி மய்யம் நவம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை ‘ஐயமிட்டு உண்’ என்ற உணவுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ திட்டமான ‘ஐயமிட்டு உண்’ திட்டத்தை, மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, பசி என வருவோருக்கு புசி என உணவளித்து, வருங்காலத்தை வளமாக மாற்றுவோம், மாறுபாடு இல்லாமல்.

நமது தலைவர் அவர்கள், காலை 10:00 மணிக்கு தலைமையகத்தில் இருந்து கிளம்பி உணவு வழங்க செல்லும் ஊர்திகளை கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். அனைத்து மய்ய உறவுகளும் காலை 9:30 மணிக்கு தலைமையகத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நமது கட்சி சார்பில் பொது மக்களுக்கு வழங்கவிருக்கும் உணவு தொடர்பான அனைத்து உதவிகளையும் இனி இந்தத் திட்டத்தின்கீழ் செயல்படுத்துமாறு கட்சித் தலைமை மய்ய உறவுகளைக் கேட்டுக்கொள்கிறது.

– உணவளித்து மனம் மகிழும் மக்கள் நீதி மய்யம்!
நாளை நமதே!