cinema


போராளிகளை இழிவுபடுத்தும், மனிதநேயமற்ற திரைப்பட விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும்
மறுத்தால் திரைப்பட திரையரங்குகள் முன்னால் போராட்டம் நடத்துவோம்

நடிகர சந்தானம் நடித்து திரையரங்கிற்கு வரவுள்ள சபாபதி என்ற திரைப்படத்தின் விளம்பர போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றார்கள்.அதில் “தண்ணீர் திறந்துவிட ஆர்ப்பாட்டம் அனைவரும் திரண்டு வருக” என்ற வாசகம் இருக்கின்றது. அந்த வாசகத்தின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போல காட்சி்ப்படுத்தி இருக்கின்றார்கள். நகைச்சுவை என்ற பெயரில் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களை, போராட்டக்காரர்களை இழிவுபடுத்தி இருக்கின்றனர். நகைச்சுவை என்ற பெயரில் மனிதநேயமற்ற காட்சிகளை வைத்து திரைப்படம் ஆக்குவதை கடுமையாக கண்டிக்கின்றோம்.

உடனடியாக அந்தத் திரைப்படத்தில் இந்தக் காட்சியை நீக்க வேண்டும். வெளியிட்டிருக்கின்ற படங்களை (stills) திரும்பப் பெற வேண்டும்.இல்லாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு அந்த திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்னால் போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கு.ராமகிருட்டிணன்
பொதுச்செயலாளர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்