நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் வீடு வாங்கினார்.
29.11.21:
நடிகை நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர். ஹரி டைரக்டு செய்து, சரத்குமார் கதாநாயகனாக நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னேறினார். கடந்த 5 வருடங்களாக அவர் தமிழ் படஉலகின் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து வருகிறார். கோடிகளில் சம்பளம் வாங்கினார்.
இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்குவதாக பேசப்படுகிறது. சென்னையில் அவருக்கு சொந்தமாக ஏற்கனவே 3 வீடுகள் உள்ளன. கோடீஸ்வரர்கள் மட்டுமே வசிக்கின்ற போயஸ் கார்டனில் வீடு வாங்கி குடியேற அவர் ஆசைப்பட்டார். அவருக்குள் அந்த ஆசையை விதைத்தவர் ஒரு ஜோதிடர் என்று கூறப்படுகிறது. அங்கு குடியேறினால் அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என்று அந்த ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. அதன்படி, போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு குடியிருப்புகளில், 2 வீடுகளை அவர் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.