cinema

கடைசி விவசாயி படத்தில் இளையராஜா நீக்கம்.சங்கத்தில் புகார்.

02.12.21:
விஜய் சேதுபதி, யோகி பாபு நடித்திருக்கும் படம் கடைசி விவசாயி.இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.இந்த படத்தின் இயக்குநர் காக்கா முட்டை,மணிகண்டன்.

இந்நிலையில் இளையராஜாவின் பின்னணி இசை மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.இசை ஞானியின் இசையை நீக்கிவிட்டு வேறு ஆளை வைத்து புதிதாக பின்னணி இசையமைக்க வைத்திருக்கிறார் மணிகண்டன். அதற்காக கூடுதல் செலவும் ஆகியிருக்கிறது.கடைசி விவசாயி படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் தனக்கு தெரிவிக்காமலேயே படத்தில் இருந்து பின்னணி இசையை நீக்கிவிட்டார்கள் என இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் இளையராஜா.

கடைசி விவசாயி படத்தை இந்த மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.கடைசி விவசாயி படத்தை ஓடிடியில் வெளியிடத் தான் முதலில் முடிவு செய்தார்கள். அதன் பிறகே தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.