education

3 கோடிக்கு அரசு பள்ளியை தத்தெடுக்கும் மார்டின் குரூப் ஆப் கம்பெனி’ஸ் நிறுவனம்.

25.02.22:
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தத்தெடுத்து சுமார் 3 கோடி மதிப்பில் பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர இருக்கிறது மார்டின் குரூப் நிறுவனம் . இந்த பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்ஸ்,கம்ப்யூட்டர் சயின்ஸ், லைபேரி , பிளே கிரௌண்ட் ,கிச்சன், டாய்லெட் உள்ளிட்டவற்றை புதிதாக கட்டிக் கொடுக்கிறது.

இதன்மூலம் அரசுப் பள்ளிகளிலும் தொழில்நுட்பம் வழியாக கல்வி கற்கும் நிலை உருவாகுவதோடு ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வம் அதிகரிக்கும்.இதற்கான விழாவில் மார்ட்டின் சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.லீமாரோஸ்மார்ட்டின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இதில் மார்ட்டின் குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், முதன்மை செயல் அலுவலர் ஜார்ஜ் மார்சல், சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர் கீதா, பள்ளி தலைமை ஆசிரியை தில்லைக்கரசி, மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர் .