education

104 வயதில் தேர்வில் முதலிடம் – 89/100 மதிப்பெண் எடுத்து அசத்திய மூதாட்டி.
கோவை 17.11.21

ஷக்ஸரத பிரக் ரெஹ்னா என்ற ஒரு திட்டம், கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், முதியவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது.படிக்க விரும்பும் முதியவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று அவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். அந்த வகையில், இந்த திட்டத்தின் மூலம் பாடம் பயின்று வந்த முதியவர்களுக்கு, சமீபத்தில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், 104 வயதான குட்டியம்மா என்ற பாட்டி பயின்று வந்துள்ளார்.

கோட்டயம் மாவட்டம் அய்யர் குன்னம் பகுதியைச் சேர்ந்த குட்டியம்மா பாட்டியும் இந்த தேர்வை எழுதியுள்ளார்.இந்த தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், குட்டியம்மா பாட்டி, தேர்வில் 100க்கு 89 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். குட்டியம்மாள் பாட்டி தன் வாழ்நாளில் பள்ளிகூடத்திற்கே செல்லாதவர்.

இவர் வீட்டில் தற்போது படித்து பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் தேர்வில் இவர் தேர்ச்சி பெற்று 89 சதவீத மார்க் வாங்கியுள்ளார். இந்த தகவல் அம்மாநில கல்வி மற்றும் தொழிலாளர்கள் அமைச்சர் சிவன் குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த டிவீட், பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பலர் இது குறித்து பேசி வருகின்றார்.