health


கோவையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலி. மக்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் மாநகராட்சி அறிவுரை.

கோவை. நவம்பர். 16-

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து மாநகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கோவை மாவட்டத்தில் இருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லும்படி கோவை மாநகராட்சி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வீட்டை தூய்மையாக வைத்திருங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். இருமல், தலைவலி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகும் படியும் பொதுமக்களை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தினம்தோறும் 64 சிறப்பு மருத்துவ முகாம்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.