health

டேக்பாத் கிட் ரெடி.

30.11.21:

புதியதாக உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான்’ பி.1.1529 என்ற வைரஸை கண்டறிய அரசு மருத்துவமனையில், 5 ஆயிரம் ‘டேக்பாத்’ கிட் உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அதிக வீரியம் கொண்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ், 3 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நோயை கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்து, கோவை வரும் விமான பயணிகளை கண்காணிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் ‘மைக்ரோ பயாலஜி’ துறையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வரும் நிலையில், ‘ஒமைக்ரான்’ வைரஸை கண்டு பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ”அரசு மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒமைக்ரான்’ புதிய வைரஸை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது, 5 ஆயிரம் ‘டேக்பாத் கிட்’ உள்ளது.இந்த ‘டேக்பாத் கிட்’ மூலம், மரபணுக்கள் மூன்று வகைகளாக பிரித்து பரிசோதிக்கப்படும். இதில், புதியதாக வைரஸ் இருப்பதை கண்டறிய முடியும். கூடுதலாக வைரஸ் கண்டறியப்பட்டால், சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.கோவையில் இதுவரை யாருக்கும் இந்த பரிசோதனை செய்யப்படவில்லை,” என்றார்.