4-12-21 கோவையில் கோவிட் தடுப்பூசி முகாம்.முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.
02.12.21:
கோவையில் மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம் வரும், 4ம் தேதியன்று நடைபெறும்,” என, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறுகையில், ”தமிழகத்தில் மருத்துவப் பணியாளர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாம், சனிக்கிழமைக்கு மாற்றப்படுகிறது.
இனி வாரம் தோறும் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.இதுவரை நடந்துள்ள மெகா தடுப்பூசி முகாமில், 10 லட்சம் பேர் வரை பயனடைந்துள்ளனர். நடக்கவுள்ள தடுப்பூசி முகாமில், முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்தாத நபர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்,” என்றார்.