health

சர்க்கரை நோய் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய சீர்கேட்டை உருவாக்கிறது.  நீரழிவு நோயை தடுக்க ஆரம்ப காலத்திலேயே நாம் விழிப்புணர்வுடன் இருந்து மீளலாம் உணவு கட்டுப்பாடு தினசரி உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயை தடுக்கலாம். சிறுதானிய கண்காட்சி.

கோவை 29.11.22:

கோவையை சேர்ந்த மருத்துவ தம்பதியினரின் டாக்டர் வேலுமணி- ஜெயலட்சுமி. இவர்கள் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நீரழிவு நோய் தடுப்பு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சி 27 ஆம் தேதி  நடைபெற்றது.
இதில்   மருத்துவர் வேலுமணி எழுதிய சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான முழுமையான தகவல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. நீதிபதி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினுடைய தலைவர் கோவிந்தராஜ் வெளியிட அவற்றை முன்னாள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் அசோக் பெற்றுக் கொண்டார்.பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் குறித்த பட்டிமன்றமும், மருத்துவர் சிவராமன் பங்கேற்று நீரழிவை கட்டுப்படுத்தும் நல் உணவுகள் குறித்து பேசினார். 
  விழாவில் புத்தகத்தை தயாரித்த வேலுமணி ஜெயலட்சுமி தம்பதியினர் பேசும்போது வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் சர்க்கரை நோய் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய சீர்கேட்டை உருவாக்கிறது .இதிலிருந்து மீள்வதற்கு மக்களுக்காக நடத்தி உள்ளோம். கோவை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நீரழிவு நோயை தடுக்க ஆரம்ப காலத்திலேயே நாம் விழிப்புணர்வுடன் இருந்து மீளலாம். உணவு கட்டுப்பாடு தினசரி உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயை தடுக்கலாம் என்று டாக்டர் வேலுமணி கூறினார்.
  இந்நிகழ்ச்சியில் சிறுதானிய பொருட்காட்சி நடைபெற்றது. இதில் சர்க்கரை நோய் தடுக்க சிறுதானியத்தின் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது . இதில், கம்பு, ராகி, சோளம், திணை உள்ளிட்ட எட்டு வகையான சிறு தானிய பொருட்களைக் கொண்டு உணவு பொருள்கள் தயாரித்து வைத்திருந்தனர்.சிறுதானிய கண்காட்சியில் பொதுமக்கள் பங்கேற்று உணவு முறையை கேட்டறிந்தனர்.
  நிகழ்ச்சிக்கு இந்திய தொழில் வட்டார சபை தலைவர் அண்ணாமலை மற்றும் கேஜி குழுமத்தின் இயக்குனர் வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.